உத்தரகாண்ட்டின் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஜோசிமத் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் ஆபத்தானவை என்று அரசு அறிவித்ததையடுத்து, உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகின்றனர்.
அங்குள்ள சுமார் 4 ஆயிரம் வீடுகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு படிப்படியாக மண்ணுக்குள் புதைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அடுத்து எங்கே குடிபெயர்வது என்று தெரியாமல் பரிதவிக்கின்றனர்.
இதனிடையே உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.