புதிய எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்ட ஹோண்டா – Automobile Tamilan

முதல் முறையாக டீசரை வெளியிட்டுள்ள ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மிகவும் சவாலான சந்தையான நடுத்தர எஸ்யூவி பிரிவில் கிரெட்டா, செல்டோஸ், கிராண்ட் விட்டாரா, ஹைரைடர், குஷாக் மற்றும் டைகன் போன்ற கார்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஹோண்டா தனது புதிய எஸ்யூவி காரை களமிறக்கவுள்ளது.

முதலில் டீசரை வெளியிட்டுள்ள இந்நிறுவனம் வருகின்ற மே மாதம் பிற்பகுதியில் இந்த காரின் அறிமுகத்தை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் முற்றிலும் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் போன்ற என்ஜின் ஆப்ஷன்களை மட்டுமே பெற்று இருக்கும் என எதிர்பார்க்கலாம். டீசல் ஆப்ஷனை பொருத்தவரை எவ்விதமான உறுதியான தகவலும் இல்லை எனவே டீசல் என்ஜின் குறித்து எதிர்பார்க்கத் தேவையில்லை.

வெளியிடப்பட்டுள்ள டீசரில் மிக நேர்த்தியான மற்றும் கம்பீரமான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்தும் வகையிலான ஹோண்டா நிறுவனத்தின் பாரம்பரியமான எஸ்யூவி டிசைன் அம்சங்களை கொன்று இருக்கின்றது.

மிக நேர்த்தியான ஹெட்லேம்ப் மற்றும் அதனுடைய கூடிய எல்இடி விளக்குகள் பகல் நேர ரன்னிங் விளக்குகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் அம்சம் மிக நேர்த்தியான வளைவுகள் மற்றும் வீல் ஆர்சுகளை கொண்டிருப்பதாகவும் அதே நேரத்தில் ஒரு கம்பீரமான தோற்ற அமைப்பினை இந்த கார் கொண்டிருக்கின்றது. சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா நிறுவனத்தின் HR-V மாடலின் தோற்ற அமைப்பிலிருந்து சில பகுதிகளை இந்த மாடல் பெற்று இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது இந்த மாடலின் நீளம் அனேகமாக நான்கு மீட்டருக்கு கூடுதலாக அதாவது 4.3 மீட்டருக்கு குறைவாக அமைந்திருக்கலாம்.

ஹோண்டா சிட்டி காரில் இடம் பெற்றிருக்கின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் ஆப்சன் எஞ்சின் ஆகிய இரண்டையும் இந்த மாடல் பெற்றிருக்கலாம். இந்த மாடல் பொறுத்தவரை 5 வேக மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் சி.வி.டி கியர்பாக்ஸ் ஆப்சனை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.