பெப்ரவரி மாத விடுமுறையை ,குறைந்த செலவில் கழிப்பதற்கு சிறந்த நாடு இலங்கை

பெப்ரவரி மாத விடுமுறையை ,குறைந்த செலவில் கழிப்பதற்கு சிறந்த நாடு இலங்கை  என்று ஐக்கிய இராச்சியத்தின் ஐ நியூஸ் இணையத்தளம் என்ற சுட்டிக் காட்டியுள்ளது.

வெளிநாடுகளில் விடுமுறையை கழிப்பதற்கு எதிர்பார்த்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்காக, இந்த வருடத்தின் 12 மாதங்களிலும், பெருந்தொகையை செலவு செய்யாமல் குறைந்த செலவில் சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய 12 நாடுகளின் பெயர்களை ஐ நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்பட இருப்பதால், நாடு முழுவதும் பல கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இலங்கையில் பெப்ரவரி மாதத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை குறைவாகக் காணப்படும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 145 ரூபாயாக இருந்த ஸ்ட்ரேலிங் பவுண் ஒன்று தற்போது 441 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் ஐ நியூஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.


அத்துடன், இலங்கையின் மலையக பிரதேசத்தில் 15 நாட்கள்  கழிப்பதற்கு ஒருவருக்கு 1845 ஸ்ட்ரேலிங் பவுண்கள் மாத்திரமே செலவாகும் என்றும் இணையத்தளம்

இந்த வகையில், ஜனவரி மாதம் மொல்டா, பெப்ரவரி மாதம் இலங்கை, மார்ச் மாதம் பல்கேரியா, ஏப்ரல் அல்பேனியா, மே மாதம் மடீரா தீவுகள் Madeira , ஜூன் மாதம் பார்பேடொஸ் Barbados, ஜூலையில் துருக்கி, ஆகஸ்ட்டில் பெல்ஜியம் ,செப்டம்பரில் ஜப்பான், ஒக்டோபரில் ஜோர்தான், நவம்பரில் எகிப்து, டிசம்பரில் கிரீஸ் என்ற அடிப்படையில், இந்த ஆண்டு அதிக பணத்தை செலவு செய்யாமல் விடுமுறையைக் கழிப்பதற்கு உலகின் மிகச் சிறந்த நாடுகளை ஐ நியூஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.