பிரேசில் நாடாளுமன்ற வன்முறை: உலக தலைவர்கள் கடும் கண்டனம்!

பிரேசில் நாடாளுமன்ற சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பிரேசில் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் ஜெய்ர் போல்சனோரோ தோல்வி அடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதை அடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாத ஜெய்ர் போல்சனோரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனோரோவின் ஆதரவாளர்கள் இன்று நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, அந்நாட்டின் உச்சநீதிமன்ற வளாகம் முன் திரண்ட அவரது ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தால் பிரேசிலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வாருகின்றனர்.

இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

ஆஸ்திரேலிய பள்ளிகளில் பஞ்சாபி மொழி கற்பிக்கப்பட உள்ளது.!

பிரேசிலியாவில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் மற்றும் நாசவேலைகள் பற்றிய செய்திகள் குறித்து ஆழ்ந்த கவலை அளிக்கிறது. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசில் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரேசிலில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலையும், அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதையும் நான் கண்டிக்கிறேன். பிரேசிலின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது. அவர்களின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்,” என தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.