வளர்ச்சிக்கான முகம் மேற்கு வங்கம் – மம்தா பானர்ஜி!….

வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி 20 கூட்டமைப்பின் நிதிசார் கூட்டத்தில் கலந்து கொண்டார். மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது என்று அவர் கூறினார்.

மாநில அரசு 12 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளது என்று கூறிய அவர், வங்காளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றார். மாநிலத்தில் மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்று கூறினார்.

எங்கள் வளர்ச்சி முயற்சிகளின் பலன்களை மக்கள் பெறுவதை உறுதி செய்வதற்காக ‘உங்கள் வீட்டு வாசலில் அரசாங்கம்’ என்ற திட்டத்தை நாங்கள் தொடங்கியதாக மம்தா தெரிவித்தார். இத்திட்டம் தேசிய விருது வென்றதை மம்தா பானர்ஜி பெருமிதத்துடன் நினைவுக்கூரினார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.