ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆசிரியர் தேர்வு ஊழல் விவகாரத்தில் சிக்கிய கோச்சிங் சென்டர் கட்டடம் இன்று திடீரென இடித்து தரைமாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக எழுத்து தேர்வு கடந்தாண்டு நடைபெறவிருந்தது.. இத்தேர்வில் மாநிலம் முழுதும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்க தயாராக இருந்தனர். . இதில் உதய்பூர் மாவட்டத்தில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதில் பெருமளவு ஊழல் நடந்தது அம்பலமானது.
இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஊழல் விவகாரத்தில் தலைநகர் ஜெயப்பூரில் மிகவும் பிரபல கோச்சிங் சென்டர் நடத்தி வந்த நிர்வாகிகளுக்கு தொடர்பிருப்பது தெரிவந்தது.
இந்நிலையில் இந்த கோச்சிங் சென்டர் அமைந்துள்ள ஜெய்ப்பூரில் ஜெகந்நாத்புரா என்ற பகுதியில் இயங்கி வந்த 4 மாடி கட்டடம் இன்று திடீரென புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கோச்சிங் சென்டர் நடத்திய நிர்வாகிகள் பூபேந்திரா சரண், சுரேஷ் தாகா ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement