கைலியன் எம்பாப்பே தனது கண்டத்தை தெரிவித்ததையடுத்து, பிரான்ஸ் ஜாம்பவான் வீரரை அவமரியாதை செய்த பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
கண்டனம் தெரிவித்த கைலியன் எம்பாப்பே
பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் நோயல் லு கிரேட் (Noel La Great) சமீபத்தில் அளித்த பெட்டியில், பிரெஞ்சு கால்பந்தாட்ட ஜாம்பவான் ஜினெட்டின் ஜிடேனை (Zinedine Zidane) அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் கத்தாரில் நடந்து முடிந்த 2022 FIFA உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்களை அடித்து ‘கோல்டன் பூட்’ விருதை வென்ற, பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஜிடேன் தான் பிரான்ஸ், ஒரு ஜாம்பவானை நாங்கள் ஒருபோதும் இப்படி அவமரியாதை செய்ய மாட்டோம்’ என தனது கண்டனத்தை தெரிவித்தார்.
Getty Images
பகிரங்க மன்னிப்பு
லா கிரேட் இப்போது தான் அளித்த பேட்டிக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
“எனது எண்ணங்களை முற்றிலும் பிரதிபலிக்காத அந்த கருத்துக்களுக்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்..,” என்றும்,
அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதையும் அவர் ஒரு அணியின் மேலாளராக மாறியதையும் கருத்தில் கொள்ளாமல் பேசியதற்காக லா கிரேட் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
Getty Images; Laurent Rivier
Zidane c’est la France, on manque pas de respect à la légende comme ça… 🤦🏽♂️
— Kylian Mbappé (@KMbappe) January 8, 2023