உத்தர பிரதேசத்தில் நிலவிவரும் கடும் குளிரால் கான்பூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர்.
வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடும் குளிர்வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடு இல்லாமல் சாலையோரம் வசிப்போருக்கு நிரந்தர தங்கும் இடமும், தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். நொய்டா, காஜியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ, பரேலி மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பகலிலும் குறைந்த வெப்பநிலையே பதிவாகியுள்ளது.
இதில் கடந்த 24 மணி நேரத்தில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளிலும், கிழக்குப் பகுதியில் சில இடங்களிலும் வென்பனி போர்த்தியது போல் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வரும் நிலையில், பலருக்கும் மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்த போன்ற பிரச்சனைகள் ஏற்பட தொடங்கியுள்ளது.
அந்த வகையில் கான்பூரில் கடும் குளிர் காரணமாக ஒரே வாரத்தில் மாரடைப்பு மற்றும் மூளை செயலிழப்பால் 100 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு, கடந்த வாரத்தில் 723 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீர் ரத்த அழுத்தம், ரத்தம் உறைதலே இறப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in