வாஷிங்டன்,
அமெரிக்காவில் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்று உள்ளார்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங், டெக்சாசில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் கோர்ட்டின் நீதிபதியாக பதவியேற்றார். இதன் வாயிலாக அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஹூஸ்டன் நகரில் பிறந்து வளர்ந்த மோனிகா, தற்போது கணவர் மற்றும் இரண்டு குழந்தை களுடன் பெல்லாயர் நகரில் வசிக்கிறார். மோனிகா, 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வந்தார், இந்நிலையில் தற்போது சிவில் கோர்ட்டில் நீதிபதியாகி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement