மனைவியை கொலை செய்து ராணுவ அதிகாரி தற்கொலை | மனைவியை கொலை செய்து ராணுவ அதிகாரி தற்கொலை

பெரோஸ்பூர், பஞ்சாபைச் சேர்ந்த ராணுவ அதிகாரி, தன் மனைவியை கொலை செய்து விட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்தவர், ராணுவ அதிகாரி நிஷாந்த். இவரது மனைவி டிம்பிள். இவர்கள் இருவரிடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இருவரிடையே நடந்த சண்டையில் நிஷாந்த், டிம்பிளை கொன்று விட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நிஷாந்திற்கும், டிம்பிளுக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், இதற்காக அவர்கள் மனநல ஆலோசனை பெற்றதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசாரும், ராணுவ அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். நிஷாந்த் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வகித்தவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.