மதுரை: தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் போலீசார் கடந்த 2019ல் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த வாகனத்தில் இருந்து 294 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, கஞ்சா கடத்தல் வழக்கை 6 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் (தற்போது கோவில்பட்டி இன்ஸ்பெக்டராக உள்ளார்) தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால், சாட்சியம் பதிவு செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.