இஸ்லாமாபாத், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், உணவுப் பொருட்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.
பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை 415 சதவீதம் உயர்ந்துள்ளது.
57 சதவீதம்
தேயிலை விலை 64 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்நாட்டின் அத்தியாவசிய உணவான கோதுமையின் விலை 57 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால், நகர்ப்புறங்களில் பணவீக்க விகிதம் 21.6 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 28.8 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துவிட்டதாகவும், தற்போதுஉள்ள கையிருப்பை வைத்து, மூன்று வாரங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றும், பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 227 ஆக சரிந்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிஉள்ள பாக்., அரசை மீட்பதற்காக, சீனாவின் உதவியை அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாடிஉள்ளார்.
சீன பிரதமர் லீ கிகுவாங் உடன் தொலைபேசி வாயிலாக உதவி கோரினார்.
இலங்கையின் நிலை?
சவுதி அரேபியாவிடம், 2.50 லட்சம் கோடி ரூபாய் உதவி தொகையை பாக்., ராணுவ தலைவர் ஆசிம் முனிர் கேட்டு உள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டதை போல, பாக்., கிலும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement