பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது மனைவி திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் வெடித்த வன்முறை
பிரேசிலில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்றார்.
ஆனால் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதாக கூறி இந்த வெற்றி ஏற்றுக் கொள்ள முடியாது என பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
Reuters
இந்நிலையில் போல்சானரோவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றம் முன் திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர்,மேலும் ஜனாதிபதி லூலா சில்வாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கலவரத்தை அடக்குவதற்காக 1,200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ஜெயிர் போல்சனரோ மருத்துவமனையில் அனுமதி
இதற்கிடையில் பிரேசிலின் தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Reuters
பிரேசிலில் போல்சானரோவின் ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, அமெரிக்காவின் புளோரிடா மருத்துவமனையில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ சிகிச்சை பெற்று வருவதாக அவரது மனைவி திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் ஓ குளோபோ செய்தித்தாள் வெளியிட்ட தகவலில், 67 வயதான போல்சனாரோ, புளோரிடாவின் ஆர்லாண்டோவுக்கு வெளியே உள்ள அட்வென்ட் ஹெல்த் கொண்டாட்டத்தின் தீவிர சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31 திகதி அவரது ஆட்சிக் காலம் நிறைவடைந்த நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு பயணம் செய்ததாக குறிப்பிட்டுள்ளது.
போல்சனாரோ “2018 ஆம் ஆண்டில் அவர் வெற்றி பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட குத்தல் தாக்குதலால் ஏற்பட்ட வயிற்று அசௌகரியம் காரணமாக மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்” என்று மைக்கேல் போல்சனாரோ Instagram இல் தெரிவித்துள்ளார்.