புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே 2,289 கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லை அமைந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் பணியில், துணை ராணுவமான பிஎஸ்எஃப் ஈடுபட்டு வருகிறது.
ஆனால், அவ்வப்போது, எல்லையில் சுரங்கங்கள் அமைத்து தீவிரவாதிகள் ஊடுருவுவதும் நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தப் பகுதியில், ஐந்து சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்நிலையில், பூமியின் அடியில் உள்ளவற்றை ஊடுருவி ஆய்வு செய்யும் ரேடார்களை, ‘ட்ரோன்’ எனப்படும் சிறிய வகை விமானத்தில் பொருத்தி கண்காணிக்கும் முயற்சியில் பிஎஸ்எஃப் ஈடுபட்டுள்ளது. இதற்கான சிறப்பு ரேடார்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. தற் போது சோதனை முறையில் இவை எல்லையில் பயன்படுத் தப்படுகின்றன.