பெட்ரோல் ஊற்றி 7 மாத கர்ப்பிணிக்கு தீ வைத்த மாமியார்… உண்மை என்ன?

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஏழு மாத கர்ப்பிணி பெண் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மாமியார் சித்திரவதை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த பெண், டெல்லி பவானா பகுதியில் வசிக்கும் குஷ்பூ (26) என அடையாளம் காணப்பட்டார். அந்த பெண் விபத்தாகதான் தன் மீது நெருப்பு பிடித்து காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

போலீசாரின் கூற்றுப்படி, “அந்த பெண் குளிருக்காக பற்றவைக்கப்பட்ட நெருப்பின் அருகே அவரது கணவருடன் அமர்ந்துள்ளார். அப்போது அவர்களுடன் மற்றொருவரும் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களுடன் இருந்தவர், நெருப்பு அணையும் தருவாயில் பெயிண்ட் தின்னரை அதில் வீசினார். இதனால், அருகில் பெண்ணின் முகம், கைகால்களில் நெருப்பு பற்றியுள்ளது. இதில், அவருடைய கணவர் வீர்பிரதாப்பிற்கும் காயமேற்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இருப்பினும், பெண்ணின் குடும்பத்தினர், அந்த பெண்ணின் வாக்குமூலத்திற்கு முரணானதாக கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது அந்த பெண் அவரது மாமியாரால் துன்புறுத்தப்பட்டதாக  கூறியுள்ளனர். அவரது மாமியாரால்தான் குஷ்புக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என அவரது சகோதரர் சந்தீப் தெரிவித்துள்ளா்.

இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்ட மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில்,”7 மாத கர்ப்பிணியை அவரது கணவர் மற்றும் மாமியார் பவானாவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். அந்த பெண் பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி பாதிக்கப்பட்டவருக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம்” என டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | ஆண்ட்டிகளை குறிவைக்கும் சீரியல் கில்லர்… இதுவரை 3 கொலை – அச்சத்தில் மக்கள்
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.