சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் முதன்முறையாக ஃபேரிங் செய்யப்பட்ட பைக் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த ஃபேரிங் பைக்கின் ஒட்டுமொத்த தோற்றம் சற்று மாறுபட்டதாக தெளிவாகத் தெரிகிறது.
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650R ரேஸ் பைக்கின் தோற்றத்துடன் மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கும். இந்த நேரத்தில், மோட்டார் சைக்கிள் குறைவான ஃபேரிங் பேனலுடன் மிக சிறப்பாக காட்சியளிக்கின்றது. புகைப்போக்கி அமைப்பில் சற்று மாறுதல்களை பெற்று வழக்கமான ஜிடி 650 பைக்கினை போலவே அமைந்திருக்கின்றது.
கான்டினென்டினல் ஜிடி 650 மோட்டார் சைக்கிளில் பொதுவான 648cc, ஏர்-கூல்டு பேரலல்-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 47hp பவர் மற்றும் 52Nm டார்க் வெளிப்படுத்துவது உறுதியாகியுள்ளது.
650சிசி பிரிவில் இன்டர்செப்டார், கான்டினென்டினல் ஜிடி தவிர கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 விலை இன்றைக்கு அறிவிக்கப்பட உள்ளது.