கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் திருமணத்திற்கு அவரது தாயே எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) தாயார், டோலோரஸ் அவிரோ (Dolores Aveiro), தனது மகன் தற்போதைய காதலியான ஜார்ஜினா ரோட்ரிகஸை (Georgina Rodriguez) திருமணம் செய்து கொள்வதை எதிர்ப்பதாக கூறப்படுகிறது.
காதலி, குழந்தைகளுடன் சவுதி சென்ற ரொனால்டோ
கத்தாரில் நடைபெற்ற 2022 FIFA உலகக்கோப்பை தொடருக்கு பிறகு, டிசம்பரில் சவுதி அரேபியாவின் Al-Nassr கிளப்புடனான இரண்டு வருடங்களுக்கான 400 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் ரொனால்டோ கையெழுத்திட்டார். இதன்மூலம் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரராக ஆனார்.
Shutterstock
ஐந்து முறை பலோன் டி’ஓர் வென்ற ஜாம்பவான் ரொனால்டோ, சவூதி அரேபிய அணியுடன் தனது புதிய பயணத்தை தொடங்க அவரது காதலி ஜார்ஜினா மற்றும் அவர்களது ஐந்து குழந்தைகளுடன் ஏற்கனவே அந்நாட்டில் இறங்கிவிட்டார்.
சவுதியில் திருமணம் ஆன பிறகே ஆண் பெண் தம்பதியாக ஒரே வீட்டில் வாழமுடியம். ஆனால், ரொனால்டோ தனது காதலியுடன் வாழ அனுமதிக்கும் வகையில் சவுதி அரேபியா அதன் சட்டத்திற்கு விலக்களிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Shutterstock
ரொனால்டோ ஏன் ஜார்ஜினாவை இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை
தகவல்களின்படி, ஜார்ஜினாவுடனான திருமணத்தில் ரொனால்டோவின் தாய் டெலோரஸ் அவிரோ முட்டுக்கட்டையாக இருக்கிறார்.
ஊடக செய்திகளின்படி, டெலோரஸ் மற்றும் ரொனால்டோவின் குடும்பத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் நிதி ஆதாயத்திற்காக மட்டுமே ஜார்ஜினா அவருடன் டேட்டிங் செய்வதாக நம்புகிறார்கள். மேலும் இரு பிரபலங்களுக்கு இடையேயான திருமண பேச்சு வார்த்தைக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Credit: Georgina Rodríguez/Instagram
ரொனால்டோவுக்கும் ஜார்ஜினாவுக்கும் இடையே கசப்பான உறவு
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் அவரது காதலியான ஜார்ஜினா ரோட்ரிகஸுக்கும் இடையேயான உறவு பாழடைந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட உறவில் சிக்கல்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் உறவை மென்மையாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.