வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இந்தூர்: வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் செயல்களைப் போற்றும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (பிரவாசி பாரதிய சம்மான்) விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன்கள் குறித்து விவாதிப்பதற்காக, ஆண்டுதோறும் “பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாடு நடந்து வருகிறது. இந்தாண்டு இன்று(ஜன.,08) முதல் ஜன.,10ம் தேதி வரை மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று(ஜன.,10) ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் வெவ்வேறு நாடுகளில் வாழும் 3,500 வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் செயல்களைப் போற்றும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரவாசி பாரதிய விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியவதாவது: இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தோர்கள் பல்வேறு துறைகளில் அர்பணிப்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவை ஒவ்வொன்றும் நமக்கு பெருமை சேர்க்கிறது. இந்த மாநாட்டில் இருந்து, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் திறமை வெளிப்படும். இது உலகளாவிய தேவை அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
ஜனாதிபதிக்கு சிறந்த வரவேற்பு: 17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தூர் வந்தார். அப்போது ஜனாதிபதிக்கு மத்திய பிரதேச கவர்னர் மற்றும் முதல்வர் தரப்பில் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு, கயானாவின் ஜனாதிபதி முகமது இர்பான் அலியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எண்ணெய் மற்றும் எரிவாயு, சுகாதாரம், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement