இளவரசி டயானா மரணமடைந்தாலும், தன் பிள்ளைகள் கூடவே இருந்து அவர் வழி நடத்துவதாக இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் நம்புகிறார்கள்.
அது குறித்த சில விடயங்களை தன் புத்தகத்தில் எழுதியுள்ளார் இளவரசர் ஹரி.
ஆவியாக வழிநடத்தும் டயானா
ஆச்சரியம் என்னவென்றால், இந்த விடயத்தை முதலில் கூறியவர் ஹரி அல்ல. இளவரசர் வில்லியம்தான் தன் தம்பியான இளவரசர் ஹரியிடம் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அம்மா நம்முடன் இருப்பதாக நான் கருதுகிறேன் ஹரி என்று கூறியதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஹரி, நானும் அப்படித்தான் கருதுகிறேன் வில்லியம் என்றாராம்.
@AFP/Getty Images
இளவரசி கேட்டை கண்டுபிடிக்க வில்லியமுக்கு உதவிய டயானா
அம்மா என் வாழ்வில் இருக்கிறார், கேட்டைக் கண்டுபிடிக்க அவர்தான் உதவினார், ஒரு குடும்பத்தைத் துவக்க அவர்தான் எனக்கு உதவுகிறார் என நான் நம்புகிறேன் என்றாராம் வில்லியம்.
அப்போது இளவரசர் ஹரி, நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன் வில்லியம், என்று அண்ணனுக்கு பதிலளித்த ஹரி, அம்மாதான் மேகனைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியதாக நான் கருதுகிறேன் என்றாராம்.
@Tim Graham Photo Library via Getty Images
உடனே அதிர்ச்சியடைந்த வில்லியம், எனக்கு அது உறுதியாகத் தெரியாது ஹரி, நான் அப்படிச் சொல்லமாட்டேன் என்றுகூறிவிட்டாராம்!
இன்று இளவரசர் ஹரியின் புத்தகமான Spare வெளியாகியுள்ள நிலையில், அதில் இதுபோன்ற பல பரபரப்புத் தகவல்களைக் கூறியுள்ளார் இளவரசர் ஹரி.