ஆஸ்கர் 2023: இரவின் நிழல் முதல் காந்தாரா வரை – தகுதிப் பட்டியலில் 11 இந்தியப் படங்கள்

நடப்பாண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுக்கு தகுதிப் பெற்ற திரைப்படங்களின் பட்டியலில் 11 இந்தியப் படங்கள் இடம்பெற்றுள்ளன.

95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 12-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல் உள்பட பல்வேறு பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விருதுக்கு சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவில் இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக குஜராத்தி படமான ‘செல்லோ ஷோ’ திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’, மற்றும் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ ஆகியப் படங்கள் உள்பட பலப் படங்கள் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டிருந்தன. இதில் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் அதிகப்பட்சமாக 14 பிரிவுகளில் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

image

கடந்த மாதம் 22-ம் தேதி முதல்கட்டமாக ஆஸ்கார் விருதில் டாக்குமெண்டரி (15), வெளிநாட்டு படங்கள் (15), மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் (10), ஒலி (10), பாடல் (15), பின்னணி இசை (15), அனிமேஷன் (10) உள்பட முதல் 10 பிரிவுகளுக்கான இறுதிச் சுற்று தேர்வுப் பட்டியலை (Short List), அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் வெளியிட்டு இருந்தது. அதில், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் மிகவும் வரவேற்புப் பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடல், இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் பட்டியலில் தேர்வாகியிருந்தது.

இதேபோல், சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவில், 92 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட படங்களில், குஜராத்திப் படமான ‘செல்லோ ஷோ’ உள்பட 15 படங்கள் தேர்வாகியிருந்தன. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்தப் படம் உள்ளிட்ட சில பிரிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது, இந்நிலையில், 95-வது ஆஸ்கருக்கான தகுதிப் பெற்ற (Eligible List) அதாவது முதல் இறுதிப் பட்டியலில் தேர்வான 301 படங்களின் பட்டியலை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ‘Avatar: The Way of Water’, ‘Black Panther: Wakanda Forever’ மற்றும் ‘Top Gun: Maverick’ உள்ளிட்டப் படங்களுட்ன் இந்தியாவில் இருந்து இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்கள் தேர்வாகியுள்ளன.

image

அந்தவகையில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’, மாதவனின் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’, ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’, விவேக் அக்னி ஹோத்ரியின்‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ஆலியா பட்டின் ‘கங்குபாய் கத்தியவாடி’, ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’, குஜராத்திப் படமான ‘செல்லோ ஷோ’, சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’, மராத்திப் படங்களான ‘மீ வசந்த்ராவ்’ (Me Vasantrao), ‘தி நெக்ஸ்ட் மார்னிங்’ (The Next Morning), ‘Tujhya Sathi Kahi Hi’ உள்ளிட்டடப் படங்கள் தேர்வாகியுள்ளன. இந்தப் படங்கள் பெரும்பாலும் சிறந்தப் படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்டப் பிரிவுகளில் தேர்வாகியுள்ளன.

இதையடுத்து தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களான மாதவன் மற்றும் பார்த்திபனுக்கு இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு மாதவன் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குநர் பார்த்திபன் தனது வழக்கமான பாணியில் நன்றி கூறியுள்ளார்.

இதேபோல் நடிகர் தனுஷ் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படமும், ஆஸ்கர் போட்டிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சிறந்த நடிகர்களுக்கான தேர்வுப் பட்டியலில், அந்தப் படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்த ரியான் கோஸ்லிங், கிறிஸ் ஈவான்ஸ் உள்ளிட்டோருடன் நடிகர் தனுஷின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் எல்லாம், பல்வேறு பிரிவுகளில் அதிகாரப்பூர்வமாக  போட்டியிடக்கூடிய திரைப்படங்கள் மட்டுமே. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாலேயே, வரும் ஜனவரி 24-ம் தேதி அன்று அறிவிக்கப்படட உள்ள ஆஸ்கர் விருதுகளின் இறுதிப் பரிந்துரை பட்டியல்களில் இந்தப் படங்கள் எல்லாம் இடம் பிடிக்குமென்பதற்கான எந்த உத்தரவாதம் இல்லை என்பது நினைவில் கொள்ளவேண்டியதாகும்.

image

image

image

image

image

image

image

image

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.