கலைஞரை விட ஸ்டாலின் மிக ஆபத்தானவர்: ஹெச்.ராஜா மீண்டும் பேட்டி

மானாமதுரை: கலைஞரை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக ஆபத்தானவர் என ஹெச்.ராஜா மீண்டும் கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் இல்லாத வார்த்தைகளை ஆளுநர் சேர்த்து பேசியதற்கு சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவை குறிப்பில் அவையெல்லாம் ஏற்றப்படாது என தீர்மானம் கொண்டுவந்தார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரை விட ஸ்டாலின் மிக ஆபத்தானவர் என தான் கூறிவிட்டேன் என்றார். சமூக நீதிக்கு எதிரானவர்கள், சனாதனவாதிகளுக்கு மு.க.ஸ்டாலின் மிக ஆபத்தானவர் தான் என மீண்டும் எச்.ராஜாவின் பேச்சு வைரல் ஆகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.