இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள், தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார்.
ஆளுநர் உரை முடிந்தவுடன், ஆளுநரை கண்டிக்கும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்கியங்களையும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றினார்.
முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேறினார்.
ஏற்கனவே தமிழகம் VS தமிழ்நாடு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சட்டப்பேரவையில் முதல்வரும், ஆளுநரும் நடந்துகொண்ட விதம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு நல்ல திட்டங்கள் வாக்குத்து, சட்டங்களை இயற்ற கூடிய சட்டப்பேரவையில், முதல்வரும், ஆளுநரும் மோதல் போக்கு சரியில்லாய் என்று பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றக் கோரி குடியரசு தலைவரிடம் நேரில் முறையிட திமுக முடிவு செய்துள்ளது.
மேலும், இதற்காக குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து இன்னும் நேரம் ஒதுக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.