நாட்டின் பொருளாதார சமூக மேம்பாட்டிற்காக, புதிய திட்டம்

எதிர்வரும் 25 வருட காலத்தில் நாட்டின் பொருளாதார சமூக கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டிற்காக, புதிய வேலைத் திட்டம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இதற்கமைவாக 7 புதிய நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன. அரச மற்றும் அரச கொள்கை, விவசாய தொழிநுட்பம், கால நிலை மாற்றம் மற்றும் விளையாட்டு தொடர்பாக பல்கலைக் கழகங்களை உருவாக்கும் விடயங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

வரலாறு மற்றும் பொருளாதாரம் மற்றும் வர்த்தஆண்கள் தொடர்பாகவும் நிறுவகம் அமைக்கப்பட உள்ளது. புதிய திட்ங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தகம் தொடர்பான நிறுவனங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன என்று தெரிவித்த அமைச்சர், இதற்கு மேலதிகமாக மகளிர் மற்றும்  ஆலோசனைகள் இதன் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்களுக்காக கொழும்பில் 1996 வீடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு
 
12. அடுத்துவரும் 25 ஆண்டுகளில் இலங்கையில் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் துறைகளில் அபிவிருத்தியை எட்டும் நோக்கில் கீழ்க்குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அமைச்சரவைக்குத் தெளிவூட்டியுள்ளார்.
(i) கீழ்க்காணும் புதிய நிறுவனங்களைத் தாபித்தல்
• வரலாறு தொடர்பான நிறுவனம்
• பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனம்
• பெண்கள் மற்றும் பால்நிலை தொடர்பான நிறுவனம்
• அரச மற்றும் அரச கொள்கைகள் தொடர்பான பல்கலைக்கழகம்
• விவசாய தொழிநுட்ப பல்கலைக்கழகம்
• காலநிலை மாற்றங்கள் தொடர்பான பல்கலைக்கழகம்
• விளையாட்டு பல்கலைக்கழகம்
(ii) கீழ்க்காணும் பணிகளுக்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தல் :
• பெண்கள் சட்டங்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழு
• பால்நிலை சமத்துவச் சட்டம்
• பெண்களை வலுவூட்டல் சட்டம்
• சிறுவர் பாதுகாப்பு சட்டம்
• காலநிலை மாற்றங்கள் தொடர்பான சட்டம்
• சமூக நீதி தொடர்பான ஆணைக்குழு சட்டம்
• மீள் வனமாக்கல் மற்றும் தாவரக்காப்பு சட்டம்
• உயிர் இருப்புக்கள் சட்டம்
• மகாவலி ஆறு
• சிங்கராஜ வனம்
• சிவனொளிபாதமலை வனாந்தரம்/மக்கள் சூனியப் பிரதேசம்
• ஹோர்டன் சமவெளி
• நக்கல்ஸ் மலைத்தொடர்
• இராமர் பாலம்
• சமுத்திர வளங்கள் ஆய்வு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான சட்டங்கள் (விசேட வலயங்கள்ஃநுநுணு இற்குள்)
• முத்துராஜவெல (பாதுகாக்கப்பட்ட) சட்டம்
• விசேட தேவையுடையவர்களுக்கான பாதுகாப்பு சட்டம்
(ii) கீழ்வரும் புதிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் :
• நகர்ப்புற வனம் 75
• குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக கொழும்பில் 1996 வீட்டு அலகுகள்
• தேசிய இளைஞர் தளம் தொடர்பான கருத்திட்டம் மற்றும் வேலைத்திட்டங்கள்
 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.