விரைவில் நிரப்பப்படவுள்ள 3 ஆயிரத்து 949 செவிலியர் பணியிடங்களில், கொரோனா காலத்தில் பணியாற்றிய எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2023ம் ஆண்டிற்கான பிரிமியம் ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கான காசோலையை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அமைச்சர் வழங்கினார்.
பின்னர், பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 1,733 மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் காப்பீட்டுத் திட்டத்தில் தற்போது ஆயிரத்து 513 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.