உத்தரகண்டின் ஜோஷிமத் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
உத்தரகண்டின் ஜோஷிமத் விவகாரத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது, ‘ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் இந்த விவகாரத்தை கையாண்டு வருகின்றன. எல்லா முக்கிய விவகாரங்களிலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என, உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை வரும் 16ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டனர்.
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை பேசினர். அப்போது, நிலச்சரிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் நிலத்தடி நீர் தேங்கியுள்ள இடங்களையும், அவை எங்கிருந்து வருகின்றன என்பதையும் கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement