சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு.. விசாரணைக் குழு அமைத்து அரசாணை வெளியீடு..!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள், ஊழல் குறித்து பல புகார்கள் அரசிடம் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமிக்கும் குழுவில் விதிகளுக்கு புறம்பாக  பெரியசாமி நியமித்தது, பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய நெல்சனை துணைவேந்தரின் உதவியாளராகவும், குழந்தைவேல் என்பவரை முக்கிய பொறுப்பிலும் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.