உலகெங்கும் பல மொழிகளில் வெளியாகியுள்ள இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்புகள் புத்தகத்தில், தமக்கும் சகோதரர் வில்லியத்திற்கும் இடையேயான உறவு குறித்து விரிவாக மனம் திறந்துள்ளார்.
உறுப்பு தானம் செய்யவே
Spare என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஹரியின் நினைவுக்குறிப்புகள் புத்தகத்தில், வாழ்க்கையின் பல கட்டத்தில் தாம் உணர்ந்ததை அவர் பகிந்துகொண்டுள்ளார்.
தற்போது 40 வயதாகும் தமது சகோதரர் வில்லியத்திற்கு உறுப்பு தானம் செய்யவே அரண்மனை தம்மை பாதுகாத்து வளர்த்ததாக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
@getty
பட்டத்து இளவரசரான வில்லியத்திற்கு எதாவது நிகழ்ந்தால், தம்மை பயன்படுத்திக்கொள்ள அரண்மனை திட்டம் வைத்திருந்தது என்றார்.
வாரிசு என்று தமது சகோதரரை குறிப்பிட்டும் தமது பெற்றோரும் குடும்பத்தினரும், தன்னை உதிரியாக மட்டுமே கண்டார்கள் என்றார்.
தமது வாழ்க்கை என்பது தமது சகோதருக்கு சிறுநீரகமோ, அல்லது ரத்தமாற்று அறுவை சிகிச்சையோ தேவை எனில், அதற்கு தானம் செய்ய ஒருவர் தேவை என்ற வட்டத்தில் மட்டுமே இருந்தது என பதிவு செய்துள்ளார்.
மேலும், தமக்கு 20 வயதான போது தான் தந்தை சார்லஸ் கூறிய அந்த வார்த்தை தொடர்பில் தெரிய வந்தது என குறிப்பிட்டுள்ள ஹரி,
தாம் பிறந்த போது டயானாவிடம் சார்லஸ் கூறியது தம்மால் நம்பவும் மறக்கவும் முடியவில்லை என்றார் ஹரி.
@getty
ஒரு காயமாக தற்போதும்
தமக்கு வாரிசு ஒன்றையும் ஒரு உதிரியையும் பரிசளித்துவிட்டாய் என சார்லஸ் டயானாவிடம் கூறியிருந்ததை ஹரி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மேகனுடனான முதல் சந்திப்பில் வில்லியம் நடந்துகொண்ட விதம், ஒரு காயமாக தற்போதும் தமது மனத்தில் நீடிப்பதாக ஹரி குறிப்பிட்டுள்ளார்.
2016ல் அந்த சம்பவம் நடந்தது என கூறும் ஹரி, தமது சகோதரரை முதன்முறையாக சந்தித்த மேகன் மெர்க்கல், ஒரு நொடி வில்லியத்தை நெருங்கி அணைக்க முயல, வில்லியம் உடனே பின்வாங்கினார் என ஹரி பதிவு செய்துள்ளார்.
@shutterstock
தமக்கு அறிமுகமில்லாதவரை வில்லியம் அணைப்பதில்லை என்றாலும், அறிமுகப்படுத்தியது தாம் என்ற போதும் வில்லியம் அப்படி நடந்துகொண்டது மறக்க முடியாத ஒன்று என பதிவு செய்துள்ளார் ஹரி.