கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு £175 மில்லியனுக்கு அல் நஸர் கிளப்புடன் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் அந்த பணம் இரட்டிப்பாக அவருக்கு கிடைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான
போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சமீபத்தில் சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல் நஸருடன் £175 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டார்.
இந்த நிலையில் AFP மற்றும் சன் வெளியிட்ட தகவலின்படி சவூதி அரேபியாவின் 2030 உலகக் கோப்பை ஏலத்தில் எகிப்து மற்றும் கிரீஸுடன் இணைந்து அதை விளம்பரப்படுத்தி ஊக்குவித்தால் கூடுதலாக £175 மில்லியனை ரொனால்டோ பெறுவார் என தெரிவித்துள்ளது.
AP
சொந்த நாடான போர்ச்சுகலுக்கு
இருப்பினும், ரொனால்டோவின் செய்தித் தொடர்பாளர், அவர் 2030 உலகக் கோப்பையை விளம்பரப்படுத்த ஒப்புக்கொண்டதை மறுத்துள்ளார்.
அதே நேரம் 2030 உலகக் கோப்பைக்கான சவுதியின் முயற்சிக்கு பின்னால் தனது ஆதரவை ரொனால்டோ அளித்தால், அவர் தனது சொந்த நாடான போர்ச்சுகலுக்கு எதிராகப் போவார்.
இதன் மூலம் வாரத்திற்கு சுமார் £1 மில்லியன் சம்பாதிப்பார் என தெரியவந்துள்ளது.