அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தனது நாட்டுப் படைகளுக்கு உத்தரவிட்டார்.
இதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
ரஷ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 300 நாட்கள் கடந்த நிலையில் முதன் முறையாக கடந்த டிசம்பர் 21ம் தேதி அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையை அடைந்ததும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. பல வகையான நவீன ஆயுதங்கள் அடங்கிய தொகுப்பை அமெரிக்கா வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் ஜெர்மனியும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் பிரான்ஸ் நாடும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உக்ரைன் போரியில் வெல்ல நீண்ட தூர ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கத்திய சக்திகள் ஆயுத விநியோகத்தை, குறிப்பாக நீண்ட தூர செல்லும் ஏவுகணைகளை வழங்கினால், இந்த ஆண்டு போரில் உக்ரைன் வெற்றிபெற முடியும் என்று உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கேலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது
“100 கிலோமீட்டர் (60 மைல்கள்) க்கும் அதிகமான வரம்பு கொண்ட ஏவுகணைகள் மட்டுமே எங்கள் பிரதேசங்களின் ஆக்கிரமிப்பை அகற்றுவதை கணிசமாக துரிதப்படுத்த அனுமதிக்கும். இச்சூழல் இலையுதிர்காலத்தில் போர் முடிவுக்கு வரும். நீண்ட தூர ஏவுகணைகள் மாஸ்கோவால் கட்டுப்படுத்தப்படும் உக்ரேனிய எல்லைக்குள் ஆழமான ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை குறிவைக்க உக்ரைனை அனுமதிக்கும்.
கேரளாவில் பீடி சுற்றியவர் அமெரிக்காவில் நீதிபதியாக பதவி ஏற்பு.!
போதுமான அளவு ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவது, இந்த போரை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்துவதை சாத்தியமாக்கும் என்பதை எங்கள் கூட்டாளிகள் இன்று தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர்’’ என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா கடந்த ஆண்டு உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை வழங்கியது. அவை சுமார் 80 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய பல முனைகளில் மோதலின் அலையை உக்ரைனுக்குச் சாதகமாக மாற்றிய பெருமைக்குரியவை.