பாலக்காடு : பாலக்காடு சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 1.7 கோடி ரூபாய் மதிப்பிலான ‘சாரஸ்’ எனப்படும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பாலக்காடு சந்திப்பு ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லும் ரயில்களில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினரும்(ஆர்.பி.எப்.,), மாவட்ட கலால் துறையினரும் இணைந்து நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஷாலிமார்–திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப்பெட்டியில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த பையை சோதனையிட்டனர். அதில், 1.7 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘சாரஸ்’ எனப்படும் விலை உயர்ந்த போதை பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆர்.பி.எப்., அதிகாரி ஒருவர் கூறுகையில்,’கேரளாவில் இவ்வளவு மதிப்புடைய போதை பொருள் சமீபகாலத்தில் பறிமுதல் செய்யப்பட்டதில்லை.
இதுகுறித்த விசாரணையை மாவட்ட கலால் துறையினருடன் இணைந்து தீவிரப்படுத்தியுள்ளோம்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement