அரச ஊழியர்களுக்கு, கடந்த டிசம்பர் மாத சம்பளம், உரங்களை விற்பனை செய்து பெறப்பட்ட பணத்தில் இருந்தே வழங்கப்பட்டது என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளம்
விவசாய அபிவிருத்தி திணைக்களம் கடந்த பருவ காலங்களில் யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.
இந்த பணம் திறைசேரிக்கு அனுப்பப்பட்டது.
அத்துடன், கடந்த டிசம்பரில் அந்த பணத்தில் ஒரு பகுதியை அரச பணியாளர்களுக்கு, உரிய சம்பள கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் பயன்படுத்தியது என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.