போர்ச்சுகலைச் சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஐந்து பாலன் டி ஓர்களில் ஒன்றை இஸ்ரேலின் பெரும் பணக்கார் ஒருவருக்கு விற்றார் என்பது உங்களுக்கு தெரியுமா.!
5 Ballon d’Or வென்ற ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது கால்பந்து வாழ்க்கையில் 5 பலோன் டி’ஓர் (Ballon d’Or) கோப்பைகளை வென்றுள்ளார். 2008, 2013, 2014, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் அதனை வென்றார்.
ஆனால், அதில் 4 விருதுகள் மட்டுமே இப்போது அவரிடம் உள்ளது. ஏனெனில் 2017-ல் தனது பலோன் டி’ஓர் கோப்பைகளில் ஒன்றை அவர் விற்றுவிட்டார்.
AP
பொதுவாக, Ballon d’Or விருதை வென்றவர்கள், அதனை அவர்கள் விளையாடி வென்ற கிளப்பில் ஒப்படைக்கிறார்கள்.
அல்லது மாற்றாக, அது அவர்களின் சொந்த கோப்பை சேகரிப்பில் வைக்கின்றனர் அல்லது அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது.
தொண்டு நிறுவனத்திற்கு..
ஆனால் அவரது 2013 Ballon d’Or கோப்பை என்று வரும்போது, ரொனால்டோ அதை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வு லண்டனில் நடந்தது மற்றும் இஸ்ரேலின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ஐடான் ஓபர் ஏலத்தை வென்று 600,000 யூரோக்களுக்கு கோப்பையை வாங்கிக்கொண்டார்.
Marca
ரொனால்டோ கடைசியாக 2017-ல் பலோன் டி’ஓர் விருதை வென்றார்.
அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்சி 7 பலோன் டி’ஓர் விருதை இதுவரை வென்றுள்ளார்.
Photo: Fabio Ferrari / LaPresse