பாலியா,உத்தர பிரதேசத்தில் நாய் குரைத்ததால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பைரியா பகுதியில் லால் முனி, 50, என்ற பெண் வசித்து வந்தார்.
இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டருகே உள்ள சாலையில் நடந்து சென்றபோது, சிவ் சாஹர் பிந்த் என்பவரின் வீட்டில் வளர்க்கப்படும் நாய் குரைத்துள்ளது.
இது பற்றி லால் முனி தன் குடும்பத்தினருடன் வந்து முறையிட்டபோது, சிவ் சாஹர் மற்றும் அவரது குடும்பத்தினர், உருட்டுக்கட்டைகளால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை, அக்கம் பக்கத் தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள், லால் முனி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, லால் முனியின் மகன் அளித்த புகாரின்படி, சிவ் சாஹர், அவரது மகன் உட்பட மூவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement