இங்கிலாந்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மோசமான நிலைமை உருவாகும் என சுகாதாத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் மாரடைப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி அளிக்கப்படும் என அதன் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரிஷி சுனக், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் நோயாளிகளுக்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.