Railway Budget 2023: 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி ம்ஆதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கான நிதி அறிவிப்பும் வெளியாகும். அதில் தமிழகத்தின் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே நேரத்தில், நாட்டில் உள்ள ரயில் உள்கட்டமைப்பை இன்னும் திறமையானதாக மாற்ற ரயில்வே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதில், தண்டவாள விரிவாக்கம் முதல் இந்திய ரயில்வேயை மின்மயமாக்குவது வரை அடங்கும். இந்த பணிகள் அனைத்தும் விரைவாக முடிவடையும் வகையில், பட்ஜெட்டில் ரயில்வே அரசின் எதிர்பார்ப்புகளுடன் அமர்ந்துள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வேக்கான ஒதுக்கீட்டை அரசு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே இந்த கோரிக்கையை வைத்துள்ளது
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாகா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து அனைத்து பங்குதாரர்களுடனும் கூட்டங்களை நடத்துகின்றனர். இதில் ரயில்வே வாரிய அதிகாரிகளும் தங்களது கோரிக்கைகளை நிதி அமைச்சகத்திடம் வைத்துள்ளனர். அதன்படி, இந்த முறை ரயில்வே பட்ஜெட்டில் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் வெளியாகலாம்
2023-24 பொது பட்ஜெட்டில், ரயில்வே தொடர்பான பல பெரிய அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிடலாம், அதன்படி இந்த அறிவிப்பில் வந்தே பாரத் ரயில்கள், பாதைகள் அமைத்தல், ரயில்வே மின்மயமாக்கல் மற்றும் வந்தே பாரத் ரயில்களின் விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் ரயில்வேக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டின் ஒரு பகுதியாகும்
தற்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அரசு, 92 ஆண்டு கால வழக்கத்தை மாற்றியது. கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அப்போது, ரயில்வே பட்ஜெட்டையும், பொது பட்ஜெட்டையும் இணைப்பதன் மூலம் ரயில்வே துறை வளர்ச்சி அடையும் என்றும் கூறப்பட்டது.
அந்த அடிப்படையில் 2017-18 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் பொது பட்ஜெட்டையும், ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்த பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் 92 ஆண்டு கால வழக்கம் முடிவிற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.