"நோ போன், நோ மீட்டிங்!"- விடுமுறையில் இருக்கும் ஊழியரைத் தொடர்பு கொண்டால் ரூ.1 லட்சம் அபராதம்

தனியார் நிறுவனங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வீட்டுக்கு வந்தாலும், மொபைலும், லேப்டாப்பும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்கள் எந்த விடுமுறைக்குச் சென்றாலும் அலுவலக விஷயமாக அடிக்கடி போன் வந்து கொண்டுதான் இருக்கும். அதனை விடுமுறையில் இருப்பவர்களால் தவிர்க்க முடியாது.

இது போன்று விடுமுறையில் இருக்கும் போது தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக மும்பை நிறுவனம் ஒன்று புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த ‘டிரீம் 11’ என்ற கம்பெனிதான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது.

விடுமுறையில் இருக்கும் ஊழியர்

இந்நிறுவனம் டி20 கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் எந்த அணி எத்தனை ரன் எடுக்கும் என்பது தொடர்பாக ஆன்லைன் போட்டியை (Predictions) நடத்தியது. பின் அதையே ஒரு விளையாட்டு ஆப்பாக மாற்றி நடத்திவருகிறது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பவித் சேத், கம்பெனி ஊழியர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒருவாரம் எந்த வித இடையூறும் இல்லாமல் குடும்பத்துடன் விடுமுறையை அனுபவிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வாரம் இந்த வேலையிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்படுவீர்கள். உங்களுக்கு கம்பெனியிலிருந்து போன், இமெயில் என எந்தவித தொந்தரவும் இருக்காது.

உங்களுக்கான ஒரு வாரத்தை நீங்கள் செல்லும் இடத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் அனுபவிக்க முடியும். ஊழியர்கள் ஓய்வு எடுத்து, தங்களைப் புதுப்பித்துக்கொண்டு மீண்டும் வேலைக்கு வரவேண்டும் என்று டிரீம் 11 விரும்புகிறது. ஊழியர்கள் வருடாந்திர விடுமுறையில் இருக்கும் போது கம்பெனியிலிருந்து தொந்தரவு செய்தால் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும்” என்று கடுமையாகத் தெரிவித்தார்.

Office (Representational Image)

கம்பெனியின் இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இனி விடுமுறை நாள்களில் கம்பெனி தொல்லை இருக்காது என்று நிம்மதியடைந்துள்ளனர். இது போன்ற திட்டத்தை கோல்டுமென் சாக்ஸும் அறிவித்தது. ஆனால் கடந்த ஆண்டு இத்திட்டத்தை அந்நிறுவனம் ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.