சென்னை: சென்னையில் உணவின் தரத்தை பகுப்பாய்வு செய்யும் வகையில், நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில், இன்று (12–ந் தேதி) உணவு பாதுகாப்பு துறையின் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிம் பேசியவர், உணவு பொருட்களில் கலப்படத்தை தவிர்ப்பதற்கும், உணவின் தரத்தை […]