மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி சென்ற சரக்கு வாகனத்தை தடுப்பதற்காக வைக்கப்பட்ட பேரிகார்டை மோதி தள்ளிவிட்டு, சரக்கு வாகனம் நிற்காமல் வேகமாக சென்ற வீடியோ காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
செவ்வாய்கிழமை அன்று கூடல்புதூர் சோதனைச்சாவடிக்கு வந்த நபர்கள், மாடு கடத்தப்படும் தகவலை தெரிவித்ததால், மாடுகளுடன் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்துமாறு பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் தவமணி சைகை காட்டியுள்ளார்.
ஆனால், நிற்காமல் வேகமாக வந்த வாகனம், தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை இடித்துத்தள்ளிவிட்டுச் சென்றது. இதில் பேரிகார்டு, உதவி ஆய்வாளரின் மேல் பட்டதில் காலில் காயம் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த கடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.