கொல்கத்தா: கொல்கத்தாவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இயங்கிய அங்காடி ஒன்றில் கடைகள் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. சால்ட் லேக் பகுதியில் குறுகலான இடத்தில் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மூங்கில் மற்றும் தென்னை கீற்றங்களை கொண்டு அமைக்கப்பட்ட 100-க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், இங்குள்ள ஒரு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மாற்ற கடைகளுக்கும் தீவிரமாக பரவியது. தகவலறிந்து 5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த கொல்கத்தா நகர தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்த கடை உரிமையாளர் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து சால்ட் லேட் பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.