வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் விபத்தில் காரில் சிக்கி பல கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்டு இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தில், விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடில்லியில், புறநகர் பகுதியான சுல்தான்புரி என்ற இடத்தில், ஜன-01ம் தேதி அதிகாலையில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 20 வயது இளம் பெண் மீது கார் மோதியதில் கார் சக்கரத்தில் பெண்ணின் உடல் சிக்கி 12 கி.மீ., துாரம் சாலையில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டது.
இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி பலரை அதிர்ச்சி அடைய செய்தது. காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து டில்லி காவல்துறை சிறப்பு அதிகாரி ஷாலினிசிங்கை நியமித்து விசாரணை நடத்தி உடனே அறிக்கை தர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். இதையடுத்து ஷாலினிசிங் விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தார். இதில் காரில் இருந்த 5 பேர் மீது கொலை வழக்காக பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement