2019 ஆண்டில் உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதற்கான தகவல் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்திருந்த போதிலும் ,அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க தவறியமையினால் ,பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு விதிக்கபட்ட இழப்பீட்டுத்தொகையை 6 மாத காலத்திற்குள் செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தினால் இன்று (12) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிட்டுக்கப்பட்டது.
இதேபோன்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரசாங்க புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவையும், முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவையும் அவர்களது தனிப்பட்ட பணத்தில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு மேலதிகமாக அரசாங்கம் ஒரு மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நிதியம் ஒன்றும் அமைக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உரிய இழப்பீட்டுத் தொகையை குறித்த நிதியில் வரவு வைக்குமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதியத்தின் செயற்பாடுகளை மேற்பார்வையிடுமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
போதிய தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் மீதான தீர்ப்பை அறிவிக்கும் போதே உயர் நீதிமன்றம் இன்று (12) இந்த உத்தரவுகளை பிறப்பித்தது
இந்த குண்டுத்தாக்குதலினால் தனது இரு பிள்ளைகளை இழந்த நந்தன சிரிமான,,சுற்றுலாத்துறை வர்த்தகரான ஜனத் வித்தானகே, சரத் இத்தமல்கொட மூன்று கத்தோலிக்க மதகுருமார்கள், ஷங்ரிலா குண்டுத் தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி மோதித ஏக்கநாயக்க ஆகியோரால் 12 அடிப்படை மனி உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன .
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலாந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மென்டிஸ் ஆகியோர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, பிரதிவாதிகளுக்கு அவர்களின் தனிப்பட்ட பணத்தில் இருந்து 310 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.
.
இந்த மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்த்தன, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்..