சண்டிகர், ஹரியானாவில், சமையல்’காஸ்’ சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், தம்பதி மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள பிச்பாரி கிராமத்தில், அப்துல், 45, என்பவர் மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்த தம்பதி அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர்.
இவர்களது வீட்டில் இருந்து நேற்று காலை புகை வெளியேறுவதை அப்பகுதியினர் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை அணைத்தது.
அப்போது, அப்துல்,அவரது, 40 வயது மனைவி, 18 மற்றும், 16 வயது மகள்கள், 12 மற்றும், 10 வயது மகன்கள் தீயில் கருகி கிடந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
சமையல் காஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement