அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் விசிட் – ஆடிப்போன அதிகாரிகள்!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 116- வது வார்டு அமுதம் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
உதயநிதி
ஸ்டாலின் 11.01.2023 அன்று சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 116-வது வார்டு அமுதம் நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழுக் கரும்புடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1,000 ரொக்கமாக பொங்கல் பரிசுப் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் கடந்த 9 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுப் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் 11.01.2023 அன்று 116 ஆவது வார்டு, வெங்கட்ராம் தெருவில் உள்ள அமுதம் நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நியாய விலைக் கடையில் பதிவேடுகளை பார்வையிட்டு, மொத்தமுள்ள குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கை, இதுவரை வழங்கப்பட்டுள்ள தொகுப்புகள் எண்ணிக்கை விபரம் ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும் பணியாளர் பதிவேடு, பொருட்கள் பதிவேடு மற்றும் இருப்புப் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த பொது மக்களிடம் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தார். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அட்டவணையின்படி முறையாக விநியோகம் செய்திடவும், அனைத்து பதிவேடுகளையும் முறையாக பராமரித்திடவும் பணியாளர்களை கேட்டுக் கொண்டார். அப்போது பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) திரு.நே.சிற்றரசு உடனிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.