பீகார்: அரை நிர்வாண போஸ் கொடுத்த நடிகைக்கு எதிராக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். போஜ்புரியில் பல படங்களில் கவர்ச்சி பாடல்களில் ஆடியிருப்பவர் நம்ரிதா மல்லா. இவர் சில இந்தி படங்களிலும் டான்ஸ் ஆடியிருக்கிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அரை நிர்வாண புகைப்படத்தை நம்ரிதா வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் இதுபோல் புகைப்படங்கள் வெளியிட்டால்தான் பட வாய்ப்பே கிடைக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக தாக்கியும் விமர்சித்தும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மகளிர் அமைப்புகளும் நம்ரிதாவின் இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ளன. ‘நம்ரிதாவுக்கு முன்பு போல் இப்போது வாய்ப்புகள் இல்லை. இதனால் தரம் தாழ்ந்து அவர் இதுபோல் செயல்பட்டு வருகிறார்’ என ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் மீது போலீசில் புகார் அளிக்கவும் சமூக ஆர்வலர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.