இளவரசர் ஹரியின் “ஸ்பேர்” நினைவு குறிப்பு: பிரித்தானியாவில் சாதனை படைத்த முதல் விற்பனை


பிரித்தானிய இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் “ஸ்பேர்”  வெளியான முதல் நாளிலேயே 1.4 மில்லியன் பிரதிகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.

இளவரசர் ஹரியின் “ஸ்பேர்”

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ள இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு நூலான “ஸ்பேர்”(Spare) ஜனவரி 10ம் திகதி வெளியாகி வேகமாக விற்பனையாகி வருகிறது.

இந்த புத்தகத்தில் இதுவரை வெளிவராத அரச குடும்ப நிகழ்வுகள் குறித்து இளவரசர் ஹரி குறிப்பிட்டுள்ளார், அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் ஹரியின் சகோதரர் இளவரசர் வில்லியம் அவரை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும், ஒரு காலத்தில் நெருங்கிய சகோதரர்கள் தனது மனைவியான ராணி கன்சார்ட் கமிலாவை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தங்கள் தந்தையிடம் கெஞ்சியதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

இளவரசர் ஹரியின் “ஸ்பேர்” நினைவு குறிப்பு: பிரித்தானியாவில் சாதனை படைத்த முதல் விற்பனை | 1 4 M Copies Of Prince Harrys Spare Sold On 1 DaySky News

மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்த காலத்தில் 25 தாலிபான்களை கொன்றதையும் இளவரசர் ஹரி வெளிப்படுத்தியுள்ளார்.
 இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகமான “ஸ்பேர்”  வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே மிக வேகமாக விற்பனையாகும் புனைகதை அல்லாத புத்தகம் என்ற பெருமையை அடைந்தது.

டிரான்ஸ்வேர்ல்ட் பென்குயின் ரேண்டம் ஹவுஸின் நிர்வாக இயக்குநர் லாரி ஃபின்லே வழங்கிய கருத்தில், “இந்தப் புத்தகம் நல்ல வரவேற்பை பெறும் என்று நாங்கள் எப்போதும் அறிந்திருந்தோம், ஆனால் இது எங்களின் மிகச் சிறந்த எதிர்பார்ப்புகளையும் தாண்டியது” என்று தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரியின் “ஸ்பேர்” நினைவு குறிப்பு: பிரித்தானியாவில் சாதனை படைத்த முதல் விற்பனை | 1 4 M Copies Of Prince Harrys Spare Sold On 1 DaySky News

1.4 மில்லியன் பிரதிகள் விற்பனை

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இளவரசர் ஹரியின் “ஸ்பேர்” புத்தகம் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனடாவில் அதன் முதல் நாளில் 1.4 மில்லியன் ஆங்கில மொழிப் பிரதிகள் விற்றதாக வெளியீட்டாளர் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ரேண்டம் ஹவுஸ் குழுமத்தின் தலைவரும் வெளியீட்டாளருமான ஜினா சென்டர்லோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றில், “இந்த அசாதாரண முதல் நாள் விற்பனையைப் பார்க்கும்போது, வாசகர்கள் தெளிவாக ஒப்புக்கொள்கிறார்கள், ஸ்பேர் என்பது படிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம், மேலும் இது நாங்கள் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரியின் “ஸ்பேர்” நினைவு குறிப்பு: பிரித்தானியாவில் சாதனை படைத்த முதல் விற்பனை | 1 4 M Copies Of Prince Harrys Spare Sold On 1 DayANDY RAIN

ஸ்பேர் புத்தகம் உலக அளவில் மொத்தம் 16 மொழிகளில் வெளியிடப்பட்டது,  வட அமெரிக்காவில் ரேண்டம் ஹவுஸ் யு எஸ் மற்றும் ரேண்டம் ஹவுஸ் கனடா மற்றும் பிரித்தானியாவில் டிரான்ஸ்வேர்ல்ட் மூலம் ஒரே நேரத்தில் அச்சு மற்றும் டிஜிட்டல் வடிவங்களில் வெளியிடப்பட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.