சென்னை, சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் நேரடி மற்றும் மறைமுக வரிகளை தங்கள் வங்கிக் கணக்கு வாயிலாக எளிதாக செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
சி.யூ.பி., எனப்படும், சிட்டி யூனியன் வங்கி, 1904ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதற்கு, நாடு முழுதும் 750க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும், 1,680 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன.
வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகள் மற்றும் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட மறைமுக வரிகளை வசூலிக்கும் பணியில், சில தனியார் வங்கிகளையும் இணைத்துக் கொள்ள மத்திய அரசு 2021ல் அனுமதி அளித்தது. இந்த பட்டியலில், சிட்டி யூனியன் வங்கியை 2021, அக்., மாதம் மத்திய அரசு இணைத்துக் கொண்டது.
இந்த வகையில், சிட்டி யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் நேரடி மற்றும் மறைமுக வரிகளை தங்கள் வங்கி கணக்கு வாயிலாக செலுத்த வசதியாக, வங்கியின், டி.ஐ.என்., 2.0 என்ற தளத்தை மத்திய அரசின் www.eportal.incometax.gov.in என்ற இணையதளத்துடன் இணைக்கும் தொழில்நுட்ப பணி நேற்று முடிவடைந்தது.
இனி சி.யூ.பி.,யின் தனிப்பட்ட வாடிக்கையாளர்கள், பெரு நிறுவனங்கள் தங்கள் வரிகளை சி.யூ.பி., கிளைகள், ‘நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங்’ வாயிலாக எளிதாக செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement