டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் உடல்நலம் பாதிப்பு காரணமாக குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களாக அவர் மயக்கமடைந்த நிலையிலேயே குருகிராம் போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 75. […]