மதுரை எய்ம்ஸ் தலைவர் மாரடைப்பால் உயிரிழப்பு….

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரான நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவால் நாகராஜன் சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நள்ளிரவு 12:15 மணி அளவில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன், நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக இருந்தவர். மதுரையில் புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜனை கடந்த 2022-ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது.

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணின் மாமனார் இவர். அவரது மறைவுக்கு முகநூல் வாயிலாக ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.