தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று மதுவிலக்கு தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் கடைகள் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 84 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் பள்ளி கல்லூரிகள் மற்றும் கோயில் அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தால் மாற்றி தரப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயில்களுக்கு அருகில் இருந்த 84 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.