புதுடில்லி, நாடு முழுதும், ௧௮ வயதுக்கு மேற்பட்டோருக்கு, ‘பூஸ்டர் டோஸ்’ எனப்படும் முன்னெச்சரிக்கை டோசாக வழங்க, ‘கோேவாவேக்ஸ்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்கலாம்’ என, மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்து உள்ளது.
மஹாராஷ்டிராா மாநிலம்புனேயைச் சேர்ந்த, ‘சீரம் இந்தியா’ நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த ‘நோவாவேக்ஸ்’ நிறுவனத்தின், கோேவாவேக்ஸ் தடுப்பூசியை தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ளது.
இதை தடுப்பூசியாக வழங்குவதற்கு கடந்தாண்டில் அனுமதி அளிக்கப்பட்டது.
இதன்படி, 7 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பூஸ்டர் டோஸ் எனப்படும் முன்னெச்சரிக்கை டோசாக இந்த தடுப்பூசியை அளிப்பதற்கு அனுமதி கேட்டு, சீரம் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்தது.
‘கோவிஷீல்டு அல்லது கோவாக்சின்’ என, எந்த தடுப்பூசி போட்டிருந்தாலும், மூன்றாவது டோசாக கோேவாவேக்ஸ் அளிப்பதற்கு அனுமதி வழங்கலாம் என, மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரைத்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement